முகநூல் மூலம் இயற்கை தோட்டக்கலை தொழில் - மாதம் லட்சங்களை ஈட்டும் பொறியாளர்!

இன்றைய காலத்தில் நம் அனைவரின் வீட்டிலும் இந்த வாசகத்தை நம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டு இருப்போம். ”எப்ப பார்த்தாலும் அந்த பேஸ்புக்ல, என்ன தான் செஞ்சுட்டு இருக்கியோ...” என்று. ஆனால் அப்படிப்பட்ட முகநூலிலேயே தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செய்து இன்று மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து சாதிக்க முடியும் என்று எடுத்து காட்டியுள்ளார் பவன் ராகவேந்திரன். 21வயதை கூட தாண்டவில்லை ஆனால் இன்று வருமானம் ஈட்டும் தொழில்முனைவர். சென்னை கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் வாழ்த்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு தோட்டக்கலை மேல் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். “ஸ்விச் போட்ட உடன் இயங்கத் துவங்கும் மிஷினைப் போல் என் வாழ்க்கையை இயக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அந்த நிறுவனத்தில் சேர்ந்த முன்று மாதங்களிலேயே வெளியேறினேன், வெகு நாளாக வீட்டிலேயே என் வாழ்நாள் கழிந்தது,” என்று தன் தொடக்கம் பற்றி பகிர்...