ஆடை வடிவமைப்பாளர் பணியை விடுத்து ஆடு வளர்ப்பு மூலம் லட்சங்களில் வருவாய் ஈட்டும் ஸ்வேதா!
கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையின் வாயிலாக வளர்ச்சியடைய முடியும் என்பதில் பலருக்கு சந்தேகம் நிலவுகிறது. எனினும், இவ்வாறு உருவான கருத்தை தகர்த்து சிலர் இந்தப் பணி குறித்த பார்வையை மாற்றியுள்ளனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஸ்வேதா தோமர். இவர் பிரபல என்ஐஐஎஃப்டி கல்வி நிறுவனத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றிருப்பினும் ஆடு வளர்ப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
ஸ்வேதா 2015-ம் ஆண்டு திருமணமாகி கணவருடன் பெங்களூருவிற்கு மாற்றலானார். அந்த சமயத்தில்தான் அவரது பயணம் துவங்கியது. அப்போதே அவர் வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். பெங்களூரு வந்த பிறகு சொந்த தொழில் துவங்குவது குறித்து யோசித்தார்.
ஸ்வேதா ஒருமுறை தனது கணவருடன் ஒரு ஆட்டுப் பண்ணையை பார்வையிட்டார். அங்குள்ள ஆடுகளுடன் நேரம் செலவிட்டது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு அடிக்கடி பண்ணைக்குச் சென்று ஆடு வளர்ப்பு குறித்த நுணுக்கமான விஷயங்களை புரிந்துகொள்ளத் துவங்கினார்.
முழு கட்டுரையை படிக்க
நன்றி: உங்கள் கதை தமிழ்

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை சமர்ப்பித்ததற்கு நன்றி. மறுபரிசீலனை செய்த பிறகு உங்கள் கருத்துகள் வெளியிடப்படும்.