பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும். ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு: நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும். உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு: உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல்மேம்படஉதவ வேண்டும். நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு: வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும். பராமரிப்பு பற்றிய கோட்பாடு: நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்படவேண்டும்.
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்... விவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து செழிப்புடன் இருக்கும் என்று அன்றே பாடிச்சென்றார் ஒளவையார்! ஆனால் இன்றோ விவசாயத்தொழில் நலிவடைந்த நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச பாரம்பரிய விவசாயிகளும் இயற்கை முறைகளை கைவிட்டு அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற தவறான வழிகாட்டுதல்களால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. தொடர் பிரச்சாரங்களும், விழிப்புணர்வு ஒருசிலரை இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையை நோக்கி கொண்டுசெல்வது மட்டுமே நமக்குள்ள ஆறுதலான விஷயம். அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணன், அண்மையில் ஏர் கலப்பையை கையில் எடுத்துள்ளார். ”வயல்களில் மாடு பூட்டி ஏர் உழுவதையும் பெண்கள் நாற்று நடுவதையும் வீட்டு மாடியில் இருந்தே பார்க்கும் அதிர்ஷ்டம் இன்று எத்தனை பேருக்கு கிடைக்கும். கண் எதிரில் வய...
இன்றைய காலத்தில் நம் அனைவரின் வீட்டிலும் இந்த வாசகத்தை நம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டு இருப்போம். ”எப்ப பார்த்தாலும் அந்த பேஸ்புக்ல, என்ன தான் செஞ்சுட்டு இருக்கியோ...” என்று. ஆனால் அப்படிப்பட்ட முகநூலிலேயே தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செய்து இன்று மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து சாதிக்க முடியும் என்று எடுத்து காட்டியுள்ளார் பவன் ராகவேந்திரன். 21வயதை கூட தாண்டவில்லை ஆனால் இன்று வருமானம் ஈட்டும் தொழில்முனைவர். சென்னை கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் வாழ்த்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு தோட்டக்கலை மேல் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். “ஸ்விச் போட்ட உடன் இயங்கத் துவங்கும் மிஷினைப் போல் என் வாழ்க்கையை இயக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அந்த நிறுவனத்தில் சேர்ந்த முன்று மாதங்களிலேயே வெளியேறினேன், வெகு நாளாக வீட்டிலேயே என் வாழ்நாள் கழிந்தது,” என்று தன் தொடக்கம் பற்றி பகிர்...
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை சமர்ப்பித்ததற்கு நன்றி. மறுபரிசீலனை செய்த பிறகு உங்கள் கருத்துகள் வெளியிடப்படும்.