கனடாவில் தகவல் தொழில்நுட்ப பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்: கனவு வாழ்க்கையை நிஜமாக்கிய சதீஷ் கிருஷ்ணன்!

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்...

விவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து செழிப்புடன் இருக்கும் என்று அன்றே பாடிச்சென்றார் ஒளவையார்! ஆனால் இன்றோ விவசாயத்தொழில் நலிவடைந்த நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச பாரம்பரிய விவசாயிகளும் இயற்கை முறைகளை கைவிட்டு அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற தவறான வழிகாட்டுதல்களால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.

தொடர் பிரச்சாரங்களும், விழிப்புணர்வு ஒருசிலரை இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையை நோக்கி கொண்டுசெல்வது மட்டுமே நமக்குள்ள ஆறுதலான விஷயம். அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணன், அண்மையில் ஏர் கலப்பையை கையில் எடுத்துள்ளார்.


”வயல்களில் மாடு பூட்டி ஏர் உழுவதையும் பெண்கள் நாற்று நடுவதையும் வீட்டு மாடியில் இருந்தே பார்க்கும் அதிர்ஷ்டம் இன்று எத்தனை பேருக்கு கிடைக்கும். கண் எதிரில் வயல் வெளிகள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும் வணிக கட்டிடங்களாவும் மாறியது சிறு வயதிலேயே மிக ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது. இதனால் என்றாவது ஒரு நாள் நமக்கென ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது,” என்று தொடங்கினார் சதீஷ்.

முழு கட்டுரையை படிக்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

முகநூல் மூலம் இயற்கை தோட்டக்கலை தொழில் - மாதம் லட்சங்களை ஈட்டும் பொறியாளர்!